செங்டு ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றுக்கு முன்னேறிய இத்தாலி வீரர்

செங்டு ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
sonego
Published on
Summary

சீனாவில் நடந்து வரும் செங்டு ஓபன் டென்னிஸ் தொடரின் 2வது சுற்றுக்கு இத்தாலியின் லாரன்சோ சொனேகோ முன்னேறினார்.

செங்டு ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இத்தாலியின் லாரன்சோ சொனேகோ, ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் டக்வொர்த் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய சொனேகோ 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் 2வது சுற்றில் லாரன்சோ சொனேகோ, அமெரிக்காவின் ஜேன்சன் புருக்ஸ்பி உடன் மோத உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com