

ஸ்வீடனில் நடந்து வரும் ஸ்டாக்ஹோம் ஓபன் டென்னிஸ் தொடரில் இத்தாலி வீரரான லாரன்சோ முசெட்டி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
ஸ்டாக்ஹோம் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையா் பிரிவில் இத்தாலியின் லாரன்சோ முசெட்டி நேரடியாக 2வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
இன்று நடைபெற்ற 2வது சுற்றில் இத்தாலியின் லாரன்சோ முசெட்டி, பிரிட்டனின் டோபி சாமுவேல் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய லாரன்சோ முசெட்டி 6-1, 6-4 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்ற போட்டிகளில் அமெரிக்காவின் அலெக்ஸ் மிச்சல்சென், அர்ஜெண்டினாவின் தியாகோ அகஸ்டின் ஆகியோரும் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினர்.