ஜப்பான் ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் கனடா வீராங்கனை வெற்றி

ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது.
leylah fernandez
Published on: 
Summary

ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் கனடா வீராங்கனையான லேலா பெர்னாண்டஸ் வெற்றி பெற்றார்.

ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதல் சுற்றில் கனடாவின் லேலா பெர்னாண்டஸ், ஜப்பானின் ஹிமேனா சகாட்சுமே உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய லேலா பெர்னாண்டஸ் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் கஜகஸ்தானின் யூலியா புடின்சேவா 6-4, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் கிரீசின் மரியா சக்காரியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com