நிங்போ ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய கனடா வீராங்கனை

நிங்போ ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
leylah fernandez
Published on: 
Summary

நிங்போ ஓபன் டென்னிஸ் தொடரில் கனடாவின் லேலா பெர்னாண்டஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.

நிங்போ ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிச் சுற்றுப் போட்டி இன்று நடந்தது. இதில் கனடாவின் லேலா பெர்னாண்டஸ், செக் குடியரசின் மேரி பவுஸ்கோவா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய லேலா பெர்னாண்டஸ் 6-3, 7-5 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.

நாளை நடைபெறவுள்ள இறுதிச்சுற்றில் லேலா பெர்னாண்டஸ் எலினா ரிபாகினா அல்லது ரஷியாவின் டயானா ஷ்னைடர் உடன் மோத உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com