பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: அமெரிக்க வீராங்கனை அதிர்ச்சி தோல்வி

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ரியாத்தில் நடந்து வருகிறது. இதில் அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலா தோல்வி அடைந்தார்.
பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: அமெரிக்க வீராங்கனை அதிர்ச்சி தோல்வி
Published on

ரியாத்:

உலகின் டாப்-8 முன்னணி வீராங்கனைகள் மட்டும் பங்கேற்கும் டபிள்யூ.டி.ஏ. இறுதிச்சுற்று எனப்படும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நடைபெற்று வருகிறது.

ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனையான ஜெசிகா பெகுலா, செக் வீராங்கனை பார்பரா கிரெஜ்சிகோவா உடன் மோதினார்.

இதில் கிரெஜ்சிகோவா 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வென்றார். இதில் அமெரிக்க வீராங்கனை பெகுலா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com