அமெரிக்க ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்ற நம்பர் 1 ஜோடி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.
siniakova, townsend
Published on
Summary

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் இரட்டையரில் கடேரினா சினியாகோவா - டெய்லர் டவுன் செண்ட் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், பெண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டி நேற்று நடந்தது.

இதில் செக் குடியரசின் கடெரினா சினியாகோவா - அமெரிக்காவின் டெய்லர் டவுன்செண்ட் ஜோடி, அமெரிக்காவின் மோண்ட்கோமேரி-ஆஷ்லின் குருகர் ஜோடி உடன் மோதியது.

இதில் சிறப்பாக ஆடிய அமெரிக்க ஜோடி முதல் செட்டை 7-5 என வென்றது.

இதில் சுதாரித்துக் கொண்டு அதிரடியாக ஆடிய சினியாகோவா-டவுன்செண்ட் ஜோடி அடுத்த இரு செட்களை 6-0, 6-2 என வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தியது.

செக் குடியரசின் கடெரினா சினியாகோவா-அமெரிக்காவின் டெய்லர் டவுன்செண்ட் ஜோடி இரட்டையரில் நம்பர் 1 ஜோடி என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com