ஹம்பர்க் ஓபன் டென்னிஸ்: காயத்தால் விலகிய ஒசாகா: சாம்பியன் பட்டம் வென்ற முசோவா

ஹம்பர்க் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்தது.
karolina muchova
Published on

ஹம்பர்க் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்றது.

பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி இன்று நடந்தது. இதில் ஜப்பானின் நவோமி ஒசாகா, செக் குடியரசின் கரோலினா

உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய கரோலினா முசோவா முதல் செட்டை 6-1 என கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் 1-0 என முசோவா முன்னிலை பெற்றிருந்தார்.

அப்போது காலில் காயம் ஏற்பட்டதால் நவோமி ஒசாகா போட்டியில் இருந்து விலகினார்.

இதையடுத்து, கரோலினா முசோவா சாம்பியன் பட்டம் வென்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்த ஆண்டில் கத்தார் ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றார் என்பதும், ஸ்டட்கார்ட் ஓபன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த வாரம் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் தொடங்கவுள்ள நிலையில் நவோமி ஒசாகாவுக்கு காயம் ஏற்பட்டு விலகியது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com