

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் 2வது சுற்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா வெற்றி பெற்றார்.
'டாப்-8' வீராங்கனைகள் பங்கேற்கும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
கிராண்ட்ஸ்லாமுக்கு அடுத்தபடியாக கவுரமிக்க போட்டியான இதில் ஒற்றையர் பிரிவில் கலந்து கொள்ளும் 8 வீராங்கனைகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று நடந்த 2வது சுற்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, உக்ரைனின் மர்டா கோஸ்ட்யூக் உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய ஜெசிகா பெகுலா 6-2, 7-5 என்ற செட் கணக்கில் வென்றார்.
முதல் சுற்றில் ஜெசிகா பெகுலா, சக நாட்டு வீராங்கனையான கோகோ காப்பிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.