சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் ஜெசிகா பெகுலா, மரியா சக்காரி வெற்றி

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
jessica
Published on

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இத்தொடர் வரும் 23-ம் தேதி வரை நடைபெறுகிறது. தற்போது 2வது சுற்று போட்டிகள் நடந்து வருகிறது.

முன்னணி வீராங்கனைகள் நேரடியாக 2வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, சுவிட்சர்லாந்தின் சிமோனா வால்டர்ட் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ஜெசிகா பெகுலா 6-2, 6-2 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் கிரீஸ் வீராங்கனையான மரியா சக்காரி 6-4, 6-0 என்ற செட் கணக்கில் உஸ்பெகிஸ்தானின் கமீலா ராக்கிமோவாவை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறவுள்ள 3வது சுற்றில் ஜெசிகா பெகுலா, சக நாட்டு வீராங்கனையான எம்மா நவரோவா உடன் மோதுகிறார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com