Charleston Open டென்னிஸ்: மேடிசன் கீஸ், ஜெசிகா பெகுலா அரையிறுதிக்கு முன்னேற்றம்

சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
Charleston Open டென்னிஸ்: மேடிசன் கீஸ், ஜெசிகா பெகுலா அரையிறுதிக்கு முன்னேற்றம்
Published on

சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.

இந்தத் தொடரில் நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று போட்டியில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ், சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்கிக் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய மேடிசன் கீஸ் 4-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 3-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் ரஷிய வீராங்கனை டயானா ஷ்னைடரை வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com