

சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்று போட்டியில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ், ஹங்கேரியின் அன்னா பண்டார் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய மேடிசன் கீஸ் 6-2, 7-5 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 1-6, 6-1, 7-6 (7-1) என்ற செட் கணக்கில் இத்தாலி வீராங்கனை எலிசாபெட்டாவை வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.