Berlin Open டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் ஜெசிகா பெகுலா

பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது.
jessica pegula
Published on

மகளிர் மட்டும் பங்கேற்கும் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீராங்கனைகள் விளையாடி வருகின்றனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, சக நாட்டு வீராங்கனையான மேடிசன் கீஸ் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ஜெசிகா பெகுலா 7-6 (7-5), 7-6 (10-8) என்ற செட் கணக்கில் போராடி வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com