ஈஸ்ட்போர்ன் டென்னிஸ் போட்டி: அரையிறுதியில் இத்தாலி வீராங்கனை தோல்வி

ஈஸ்ட்போர்ன் சர்வதேச டென்னிஸ் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவுலினி தோல்வி அடைந்தார்.
ஈஸ்ட்போர்ன் டென்னிஸ் போட்டி: அரையிறுதியில் இத்தாலி வீராங்கனை தோல்வி
Published on

லண்டன்:

ஈஸ்ட்போர்ன் சர்வதேச டென்னிஸ் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.

இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவுலினி, ரஷிய வீராங்கனை டேரியா கசட்கினாவுடன் மோதினார்.

இதில் பவுலினி 6-3, 5-7, 3-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறினார். இதன்மூலம் கசட்கினா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் கசட்கினா, கனடா வீராங்கனை ஆனி பெர்னாண்டசுடன் மோத உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com