

நிங்போ ஓபன் டென்னிஸ் தொடரில் இத்தாலி வீராங்கனையான ஜாஸ்மின் பவுலினி 2வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
நிங்போ ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றுப் போட்டி இன்று நடந்தது. இதில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி, அமெரிக்காவின் இவா ஜோவிக் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய இவா ஜோவிக் 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இதன்மூலம் இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவுலினி அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.