துபாய் ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் இத்தாலி வீராங்கனை தோல்வி

துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவுலினி தோல்வி அடைந்தார்.
துபாய் ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் இத்தாலி வீராங்கனை தோல்வி
Published on

துபாய்:

துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் இரண்டாவது சுற்றுக்கு இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி நேரடியாக தகுதி பெற்றார். அவர் பிலிப்பைன்சின் அலெக்சாண்டர் ஈலா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய பிலிப்பைன்ஸ் வீராங்கனை 6-1, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் வென்றார். இதன்மூலம் முன்னணி வீராங்கனையான பவுலினி தொடரில் இருந்து வெளியேறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com