சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: நம்பர் 1 வீரர் விலகல்

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெறுகிறது.
sinner
Published on

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இந்தத் தொடர் வரும் 23-ம் தேதி வரை நடைபெறுகிறது. தற்போது தகுதிச்சுற்று போட்டிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில், சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து உலகின் முதல் நிலை வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர் விலகி உள்ளார். முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சின்சினாட்டி ஓபன் தொடரிலிருந்து சின்னர் விலகியுள்ளார்.

இதுதொடர்பாக சின்னர் கூறுகையில், வரவுள்ள அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரை கருத்தில் கொண்டும், மருத்துவர்களின் பரிந்துரையை ஏற்றும் சின்சினாட்டி தொடரில் இருந்து விலகுகிறேன் என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே வலது மணிக்கட்டு பகுதியில் ஏற்பட்ட காயம் குணமடையாத நிலையில், சின்சினாட்டி ஓபன் தொடரில் இருந்து உலகின் 2-ம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் விலகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com