ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி: முழங்கால் ஆபரேஷனுக்கு பிறகு சின்னர் பதிவு

ஜூலை மாதம் நடந்த விம்பிள்டன் தொடரில் சின்னர் பட்டம் வென்றபிறகு எந்தப் போட்டியிலும் பங்கேற்கவில்லை.
sinner
Published on: 
Summary

இத்தாலி டென்னிஸ் வீரரும், உலகின் 2-ம் நிலை வீரருமான ஜானிக் சின்னருக்கு வெற்றிகரமாக ஆபரேஷன் செய்யப்பட்டது.

ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவை வீழ்த்திய ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார். ஏற்கனவே 2 முறை சாம்பியன் பட்டம் வென்ற இத்தாலியின் ஜானிக் சின்னர் இந்த ஆண்டில் காயம் காரணமாக பங்கேற்கவில்லை.

5 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான சின்னர், கடந்த ஜூலை மாதம் நடந்த விம்பிள்டன் தொடரில் பட்டம் வென்றபிறகு எந்தப் போட்டியிலும் பங்கேற்கவில்லை. முழங்கால் காயத்தால் அக்டோபரிலேயே 2026 சீசனை முன்கூட்டியே முடித்துக் கொள்வதாக அறிவித்திருந்தார்.

இந்த ஆண்டு ஜானிக் சின்னர் 44 வெற்றிகள், 3 தோல்விகள் என்ற சிறப்பான சாதனையுடன் உள்ளார். விம்பிள்டன் பட்டம் உள்பட மொத்தம் 6 பட்டங்களை வென்றுள்ளார். தொடர்ச்சியாக 29 போட்டிகளில் வெற்றிபெற்று தனது சிறந்த வெற்றிப் பயணத்தையும் பதிவு செய்துள்ளார்.

முழங்கால் ஆபரேஷன்

இந்நிலையில், இத்தாலி டென்னிஸ் வீரரும், உலகின் 2-ம் நிலை வீரருமான ஜானிக் சின்னர், முழங்கால் காயத்துக்காக ஆபரேஷன் செய்துகொண்டுள்ளார்.

இதுதொடர்பாக ஜானிக் சின்னர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள செய்தியில், கடந்த சில மாதமாக எனது குழுவுடன் இணைந்து ஆபரேஷன் இல்லாமலேயே காயத்தை குணப்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டோம். தொடக்கத்தில் நல்ல முன்னேற்றம் இருந்தபோதிலும், முழங்கால் எதிர்பார்த்தபடி குணமடையவில்லை. இதனால் சிறிய ஆபரேஷன் செய்துகொண்டேன். இனி எனது குழுவுடன் இணைந்து மீட்புப் பணியை தொடங்க உள்ளேன். ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.

தற்போது அறுவை சிகிச்சைக்குப் பிறகு மீட்புப் பணியில் கவனம் செலுத்தி வருகிறார் சின்னர்.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ள ஆஸ்திரேலிய ஓபனில் சின்னர் பங்கேற்பாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

X