ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முன்னாள் நம்பர் 1 வீராங்கனை திடீர் விலகல்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் அடுத்த மாதம் நடைபெறுகிறது.இந்தத் தொடரில் இருந்து ருமேனியா முன்னணி வீராங்கனை விலகியுள்ளார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முன்னாள் நம்பர் 1 வீராங்கனை திடீர் விலகல்
Published on

சிட்னி:

அடுத்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் அடுத்த மாதம் 12-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான தகுதிச்சுற்று ஜனவரி 6 முதல் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில், இந்தத் தொடரிலிருந்து 2 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், முன்னாள் நம்பர் 1 வீராங்கனையான ருமேனியாவின் சிமோனா ஹாலெப் விலகுவதாக அறிவித்துள்ளார்.

கால்முட்டி மற்றும் தோள்பட்டை வலியால் அவதிப்படும் அவர் அதிலிருந்து முழுமையாக மீளாததால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com