இந்தியன் வெல்ஸ் ஓபன்: ஸ்வியாடெக், ரிபாகினா முதல் சுற்றில் வெற்றி

இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதன் முதல் சுற்றில் போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் வெற்றி பெற்றார்.
இந்தியன் வெல்ஸ் ஓபன்: ஸ்வியாடெக், ரிபாகினா முதல் சுற்றில் வெற்றி
Published on

வாஷிங்டன்:

இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இதில் போலந்து வீராங்கனையான இகா ஸ்வியாடெக், பிரான்சில் கரோலின் கார்சியா உடன் மோதினார்.

இதில் ஸ்வியாடெக் 6-2, 6-0 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா 6-3, 6-3 என வென்று, நெதர்லாந்து வீராங்கனையை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com