கனடா ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஸ்வியாடெக், ரிபாகினா

கனடா ஓபன் டென்னிஸ் தொடர் டொரண்டோவில் நடந்து வருகிறது.
rybakina, iga swiatek
Published on

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அங்குள்ள டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது. மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.

இன்று நடந்த முதல் அரையிறுதி சுற்று போட்டியில் நம்பர் 4 வீராங்கனையும், அமெரிக்காவைச் சேர்ந்தவருமான கோகோ காப், கஜகஸ்தானின் எலினா ரிபாகினா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய கோகோ காப் முதல் செட்டை 7-5 என வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட ரிபாகினா அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 6-2, 6-2 என கைப்பற்றி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

மற்றொரு அரையிறுதியில் போலந்தின் இகா ஸ்வியாடெக், உக்ரைனின் எலினா ஸ்விடோலினா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ஸ்வியாடெக் 6-3, 1-6, 6-3 என வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

இதேபோல், நாளை நடைபெற உள்ள இறுதிச்சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக், கஜகஸ்தானின் எலினா ரிபாகினா உடன் மோதுகிறார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com