வூஹான் ஓபன் டென்னிஸ்: முன்னாள் நம்பர் 1 வீராங்கனைக்கு அதிர்ச்சி அளித்த போலந்து வீராங்கனை

வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
maja chwalinska
Published on: 
Summary

வூஹான் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிச் சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் சக வீராங்கனை மஜா சாவ்லின்ஸ்கா.

வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிச் சுற்றில் முன்னணி வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், சக நாட்டு வீராங்கனை மஜா சாவ்லின்ஸ்கா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய மஜா சாவ்லின்ஸ்கா 7-5, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

இதன்மூலம் முன்னாள் நம்பர் 1 வீராங்கனையான இகா ஸ்வியாடெக் தோல்வி அடைந்து வெளியேறினார்.

மற்றொரு அரையிறுதில் பிரிட்டனின் சோனே கர்தால் 7-6 (11-9), 7-6 (7-5) என்ற செட் கணக்கில் லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டோபென்கோவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் போலந்தின் மஜா சாவ்லின்ஸ்கா பிரிட்டனின் சோனே கர்தால் உடன் மோதுகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com