

வூஹான் ஓபன் டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்றுக்கு போலந்தின் இகா ஸ்வியாடெக், செக் குடியரசின் கரோலினா முசோவா ஆகியோர் முன்னேறினர்.
வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் முன்னணி வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், சக நாட்டு வீராங்கனையான மக்டலேனா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ஸ்வியாடெக் 6-2, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் செக் குடியரசின் கரோலினா முசோவா 3-6, 7-6 (7-1), 7-6 (7-4) என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் கேடி மெக்னல்லியை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.