சின்சினாட்டி ஓபன்: இகா ஸ்வியாடெக் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.இதில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
சின்சினாட்டி ஓபன்: இகா ஸ்வியாடெக் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
Published on

சின்சினாட்டி:

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இது அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது. இந்தப் போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இதில் நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவில் போலந்தின் இகா ஸ்வியாடெக் நேரடியாக 2வது சுற்று ஆட்டத்துக்கு தகுதிபெற்றார்.

இன்று நடந்த 2வது சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக், ரஷியாவின் அனஸ்தசியா பொடபோவா உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய இகா ஸ்வியாடெக் 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். 11-ம் தேதி நடைபெறும் அடுத்த சுற்றில் இகா ஸ்வியாடெக், உக்ரைன் வீராங்கனை மார்ட்டா கோஸ்டியூக் உடன் மோதுகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com