பார்சிலோனா ஓபன் தொடரில் சாம்பியன்: டாப் 10-ல் இடம் பிடித்தார் ஹோல்ஜர் ரூனே

பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடரில் ஹோல்ஜர் ரூனே சாம்பியன் பட்டம் வென்றார்.இதையடுத்து தரவரிசையில் டாப் 10-ம் இடம் பிடித்தார் ஹோல்ஜர் ரூனே.
பார்சிலோனா ஓபன் தொடரில் சாம்பியன்: டாப் 10-ல் இடம் பிடித்தார் ஹோல்ஜர் ரூனே
Published on

பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் கடந்த 20-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதில் டென்மார்க்கைச் சேர்ந்த ஹோல்ஜர் ரூனே சாம்பியன் பட்டம் வென்றார்.

இந்நிலையில், சர்வதேச டென்னிஸ் சங்கம் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது.

அதன்படி ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில், இத்தாலியின் ஜானிக் சின்னர் முதலிடத்தில் தொடருகிறார்.

பார்சிலோனா ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூனே 4 இடங்கள் முன்னேறி 9-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 2-வது இடத்துக்கு முன்னேறினார். கார்லோஸ் அல்காரஸ் ஒரு இடம் சரிந்து 3வது இடத்தில் உள்ளார்.

அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் 4-வது இடத்திலும், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 5-வது இடத்திலும் நீடிக்கிறார்கள்.

ரஷிய வீரரான மெத்வதேவ் ஒரு இடம் சரிந்து 10-வது இடம் பிடித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com