இத்தாலியன் ஓபன் டென்னிஸ் - இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ரூனே

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.ஆண்கள் ஒற்றையர் பிரிவில் டென்மார்க் வீரர் ரூனே இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
ஹோல்ஜர் ரூனே
ஹோல்ஜர் ரூனே
Published on

ரோம்:

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூனே, நார்வே வீரர் காஸ்பர் ரூட்டுடன் மோதினார்.

இந்தப் போட்டியில் முதல் செட்டை காஸ்பர் ரூட் வென்றார். இதனால் சுதாரித்துக் கொண்ட ஹோல்ஜர் ரூனே அடுத்த இரு செட்களையும் வென்றார்.

இறுதியில், ரூனே 6-7, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

காலிறுதியில் முன்னணி வீரரான ஜோகோவிச்சை தோல்வி அடையச் செய்தவர் ஹோல்ஜர் ரூனே என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com