ஹம்பர்க் ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் கஜகஸ்தான் வீராங்கனை வெற்றி

ஹம்பர்க் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது.
yulia putintseva
Published on: 

ஹம்பர்க் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீராங்கனைகளான ஸ்பெயினின் பவுலா படோசா, கஜகஸ்தானின் யூலியா புடின்சேவா உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் கஜகஸ்தானின் யூலியா புடின்சேவா, ஜெர்மனியின் மோனா பார்தெல் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய புடின்சேவா 6-2, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com