Hamburg Open: ஆண்கள் இரட்டையரில் சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனி ஜோடி

ஹம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி ஜெர்மனியில் நடந்தது.
Hamburg Open: ஆண்கள் இரட்டையரில் சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனி ஜோடி
Published on

ஹம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி ஜெர்மனியில் நடைபெற்றது.

இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்றில் ஜெர்மனியின் டிம் புட்ஸ்-கெவின் ரவிட்ஸ் ஜோடி, பிரான்சின் சாடியோ டோம்பியா-பேபியன் ரீபவுல் ஜோடி உடன் மோதியது.

இதில் சிறப்பாக ஆடிய ஜெர்மனி ஜோடி முதல் செட்டை 6-3 என வென்றது. இதில் சுதாரித்துக் கொண்ட பிரான்ஸ் ஜோடி 6-4 என 2வது செட்டைக் கைப்பற்றியது.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் அதிரடியாக ஆடிய ஜெர்மனி ஜொடி 10-8 என கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வென்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com