

கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் ஓபன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 தொடர்கள் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
இதில் பிரெஞ்சு ஓபன் பிரான்சின் பாரிஸ் நகரில் களிமண் களத்தில் விளையாடப்படுகிறது. பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் அடுத்த மாதம் 24-ம் தேதி தொடங்கவுள்ளது.
இந்நிலையில், நடப்பு ஆண்டு பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.670 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 9.5 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.