பிரெஞ்சு ஓபன்: சபலென்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் கோகோ காஃப்

முதல் செட்டை 6(5)-7(7) என கடும் போராட்டத்திற்குப் பின் கோகோ காஃப் இழந்தார்.பின்னர் சூப்பர் கம்பேக் கொடுத்து 2ஆவது மற்றும் 3ஆவது செட்டை கைப்பற்றினார்.
பிரெஞ்சு ஓபன்: சபலென்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் கோகோ காஃப்
Published on

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி இந்திய நேரப்படி இன்றிரவு நடைபெற்றது. இதில் நம்பர் ஒன் வீராங்கனையான பெலாரசின் சபலென்காவும், 2ஆம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ காஃபும் பலப்பரீட்சை நடத்தினர்.

முதல் செட்டில் இருவரும் விட்டுக்கொடுக்காமல் விளையாடினர். இதனால் டை-பிரேக்கர் வரை சென்றது. இறுதியில் சபலென்கா 7(7)- 6(5) என முதல் செட்டை கைப்பற்றினார்.

2ஆவது செட்டில் கோகோ காஃப் அபாரமாக விளையாடினார். கோகோ காஃப் ஆட்டத்திற்கு சபலென்காவால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் 5-2 என முன்னிலைப் பெற்றார். அதன்பின் 6-2 என 2ஆவது செட்டை எளிதாக கைப்பற்றினார்.

இதனால் ஆட்டம் 3ஆவது செட்டிற்கு நீடித்தது. சாம்பியன் பட்டத்தை தீர்மானிக்கும் இந்த செட்டிலும் காஃப் ஆதிக்கம் செலுத்தினார். கோகோ காஃப் 3-1 என முன்னிலைப் பெற்றிருந்தார். அதன்பின் 5-3 என முன்னிலைப் பெற்றார். 9ஆவது கேம்-ஐ சபலென்கா கைப்பற்றினார். இதனால் காஃப் 5-4 என முன்னிலைப் பெற்றிருந்தார்.

10ஆவது கேமிற்கான சர்வீஸை காஃப் தொடங்கினார். இந்த கேம் "ஏஸ்" வரை சென்றாலும் காஃப் கைப்பற்றினார். இதனால் 2-1 {6(5)-7(7), 6-2, 6-4} என அபாரமாக வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com