

சீனா ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்றில் உக்ரைன் வீராங்கனையான எலினா ஸ்விடோலினா அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்றது.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் உக்ரைனின் எலினா ஸ்விடோலினா, சீனாவின் குயின்வென் ஜெங் உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய சீன வீராங்கனை 6-3, 7-6 (8-6) என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
இதன்மூலம் முன்னணி வீராங்கனையான உக்ரைனின் எலினா ஸ்விடோலினா அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.