பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: சபலென்காவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் ஸ்விடோலினா

முன்னணி வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
elina svitolina
Published on: 
Summary

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு உக்ரைனின் எலினா ஸிடோலினா முன்னேறினார்.

உலகின் டாப்-8 முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கும் டபிள்யூ.டி.ஏ. இறுதிச்சுற்று டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவில் உள்ள இண்டியன்வெல்ஸ் நகரில் நடந்து வருகிறது.

எலினா ஸ்விடோலினா வெற்றி

இன்று நடந்த ஆட்டத்தில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் பெலாரசின் அரினா சபலென்கா, உக்ரைனி எலினா ஸ்விடோலினா உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய ஸ்விடோலினா 6-3 என வென்றார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆடிய சபலென்கா 2வது செட்டை 6-3 என கைப்பற்றினார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் அதிரடியாக ஆடிய ஸ்விடோலினா 6-1 என எளிதில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

சபலென்கா வெளியேற்றம்

இதன் மூலம் முன்னணி வீராங்கனையான அரினா சபலென்கா இந்தத் தொடரில் இருந்து வெளியேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா 6-2, 6-1 என்ற செட் கணக்கில் ரஷியாவின் டயானா ஷ்னைடரை தோற்கடித்தார்.

நாளை நடைபெறும் அரையிறுதியில் ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா, அமெரிக்காவின் ஜெசிகாபெகுலாவை எதிர்கொள்கிறார்.

மற்றொரு அரையிறுதியில் விம்பிள்டன் சாம்பியனான செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா உக்ரைனின் எலினா சுவிடோலினாவை சந்திக்கிறார்.

X