விம்பிள்டன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறிய ரைபகினா

இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 6-3 என்ற புள்ளிக்கணக்கில் ரைபகினா கைப்பற்றினார். வரும் 10-ம் தேதி நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் எலினா ரைபகினா, உக்ரைனின் எலினா ஸ்விடோலினா உடன் மோத உள்ளார்.
விம்பிள்டன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறிய ரைபகினா
Published on

லண்டன்:

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான கஜகஸ்தானின் எலினா ரைபகினா, ரஷியாவின் அன்னா கலின்ஸ்காயாவை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 6-3 என்ற புள்ளிக்கணக்கில் ரைபகினா கைப்பற்றினார். தொடர்ந்து நடைபெற்ற 2-வது செட்டில் ரைபகினா 3-0 என முன்னிலையில் இருந்த போது அன்னா கலின்ஸ்காயா காயம் காரணமாக போட்டியில் இருந்து வெளியேறினார்.

இதன் காரணமாக கஜகஸ்தானின் எலினா ரைபகினா காலிறுதிக்கு முன்னேறினார். வரும் 10-ம் தேதி நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் எலினா ரைபகினா, உக்ரைனின் எலினா ஸ்விடோலினா உடன் மோத உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com