நிங்போ ஓபன் டென்னிஸ்: எலினா ரிபாகினா காலிறுதிக்கு முன்னேற்றம்

நிங்போ ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
elina rybakina
Published on: 
Summary

நிங்போ ஓபன் டென்னிஸ் தொடரில் கஜகஸ்தான் வீராங்கனையான எலினா ரிபாகினா காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

நிங்போ ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றுப் போட்டி இன்று நடந்தது. இதில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, உஸ்பெகிஸ்தானின் பொலினா குடர்மெடோவா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ரிபாகினா முதல் செட்டில் 5-0 என முன்னிலை பெற்றிருந்தார். அப்போது குடர்மெடோவா காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகுவதாஅ அறிவித்தார்.

இதையடுத்து, கஜகஸ்தானின் ரிபாகினா காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறவுள்ள காலிறுதியில் ரிபாகினா, போலந்தின் கேடரினா கவா உடன் மோதுகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com