

பாரிஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் 2வது சுற்றில் செர்பியாவின் ஜோகோவிச், ரஷியாவின் மெத்வதேவ் ஆகியோர் அதிர்ச்சி தோல்வி அடைந்தனர்.
பாரிஸ் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடந்து வருகிறது.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஆஸ்திரேலியாவின் ரிங்கி ஹிஜ்ஜிகட்டா உடன் மோதினார்.
இதில் ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய ஜோகோவிச் 6-3 என முதல் செட்டை வென்றார்.
இதில் சுதாரித்துக் கொண்ட ரிங்கி அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 6-3, 6-3 என வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.
இதன்மூலம் முன்னணி வீரரான ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
மற்றொரு போட்டியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் 6-4, 6-4 என்ற செட் கணக்கில் பெருவின் இக்னசியோ பியூசிடம் தோல்வி அடைந்தார்.
ஏற்கனவே நம்பர் 1 வீரரான அலெக்சாண்டர் ஸ்வரேவ் முதல் சுற்றில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.