

மெல்போர்ன்:
நடப்பு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான 111-வது ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்பெயினின் கார்பெலசுடன் மோதினார். இதில் ஜோகோவிச் 6-3, 6-4, 6-0 என எளிதில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
இதேபோல், இங்கிலாந்தின் முன்னணி டென்னிஸ் வீரரான ஆண்டி முர்ரே, இத்தாலி வீரர் மேட்டியோ பெரெட்னியுடன் மோதினார்.
பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய ஆண்டி முர்ரே 6-3, 6-3, 4-6, 6-7 , 7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.