டென்னிஸ் தரவரிசையில் ஜோகோவிச், ரைபகினா முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபனில் இறுதிப்போட்டி வரை வந்த செர்பியாவின் நோவக் ஜோகோவிச் போராடி தோற்றார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் இரு ஆட்டங்களில் அரினா சபலென்கா, இகா ஸ்வியாடெக் நீடிக்கிறார்கள்.
டென்னிஸ் தரவரிசையில் ஜோகோவிச், ரைபகினா முன்னேற்றம்
Published on

நியூயார்க்:

சர்வதேச டென்னிஸ் சங்கம் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், ஆஸ்திரேலிய ஓபனை வென்று வரலாறு படைத்த கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) முதலிடத்திலும், ஜானிக் சினெர் (இத்தாலி) 2-வது இடத்திலும் மாற்றமின்றி தொடருகிறார்கள்.

ஆஸ்திரேலிய ஓபனில் இறுதிப்போட்டி வரை வந்து போராடி தோற்ற செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஒரு இடம் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். அவர் டாப்-3 இடத்திற்குள் வருவது 2024-ம் ஆண்டு ஆகஸ்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். இதனால் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ஒரு இடம் குறைந்து 4-வது இடத்துக்கு இறங்கினார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் இரு ஆட்டங்களில் அரினா சபலென்கா (பெலாரஸ்), இகா ஸ்வியாடெக் (போலந்து) நீடிக்கிறார்கள். ஆஸ்திரேலிய ஓபனில் மகுடம் சூடிய எலினா ரைபகினா (கஜகஸ்தான்) 2 இடங்கள் முன்னேறி தனது சிறந்த நிலையாக 3-வது இடத்தை பிடித்துள்ளார். அமெரிக்காவின் கோகோ காப் 3-ல் இருந்து 5-வது இடத்துக்கு சரிந்தார். ஆஸ்திரேலிய ஓபன் மூலம் கிராண்ட்ஸ்லாமில் முதல்முறையாக கால்இறுதியை எட்டிய அமெரிக்க 'இளம் புயல்' இவா ஜோவிச் 7 இடங்கள் உயர்ந்து 20-வது இடத்தை பெற்றுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com