ஜப்பான் ஓபன் டென்னிஸ்: முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ரஷிய வீராங்கனை

ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் தலைநகர் டோக்கியோவில் நடந்தது.
diana shnaider
Published on: 
Summary

ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிச்சுற்றில் வென்ற ரஷிய வீராங்கனையான டயானா ஷ்னைடர் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.

ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்தது.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த இறுதிச்சுற்றில் ரஷியாவின் டயானா ஷ்னைடர், கனடா வீராங்கனையான லேலா பெர்னாண்டஸ் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ஷ்னைடர் 6-4, 5-7, 6-2 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

ரஷியா வீராங்கனையான டயானா ஷ்னைடர் ஜப்பான் ஓபனில் சாம்பியன் பட்டம் பெறுவது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

X