அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறிய கோகோ காப், ரிபாகினா

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.
rybakina, coco gauff
Published on
Summary

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் அமெரிக்காவின் கோகோ காப், கஜகஸ்தானி எலினா ரிபாகினா ஆகியோர் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினர்.

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

நேற்று நடந்த போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப், ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய கோகோ காப் 2-6 என முதல் செட்டை இழந்தார். இதில் சுதாரித்துக் கொண்ட கோகோ காப் அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 7-6 (9-7), 6-2 என கைப்பற்றி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இன்று நடந்த மற்றொரு காலிறுதி போட்டியில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா 3-6, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் சீனாவின் குயின்வென் ஜெங்கை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறவுள்ள அரையிறுதியில் சபலென்கா, ஜெசிகா பெகுலாவுடனும், கோகோ காப், ரிபாகினா உடனும் மோதுகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com