

டொரன்டோ:
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடந்த அரையிறுதி சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப்-மெக் கார்ட்னி கெஸ்லர் ஜோடி, செர்பியாவின் டேனிலொவிச்- தைவானின் ஹை சூ வெய் ஜோடி உடன் மோதியது.
இதில் கோகோ காப் ஜோடி முதல் செட்டை 5-7 என இழந்தது. இதில் சுதாரித்துக் கொண்ட கோகோ காப் ஜோடி அடுத்த இரு செட்களை 6-4, 10-6 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் 1 வீராங்கனையான கோகோ காப் தோல்வி அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.