அமெரிக்க ஓபன் டென்னிஸ்: கோகோ காப், மிர்ரா ஆண்ட்ரீவா காலிறுதிக்கு முன்னேற்றம்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.
coco gauff, mirra andreeva
Published on
Summary

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் அமெரிக்காவின் கோகோ காப், ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா ஆகியோர் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினர்.

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

இன்று நடந்த போட்டியில் ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா, ஆஸ்திரியாவின் அனஸ்டசியா பொடபோவா உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய ஆண்ட்ரீவா 5-7, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இன்று நடந்த மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப் 6-1, 6-4 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீராங்கனையான இவான் ஜோவிக்கை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை நடைபெற உள்ள காலிறுதியில் கோகோ காப், ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா உடன் மோதுகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com