அமெரிக்க ஓபன் டென்னிஸ்: கோகோ காப், மேடிசன் கீஸ் முதல் சுற்றில் வெற்றி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.
coco gauff, madison keys
Published on
Summary

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் அமெரிக்காவின் கோகோ காப், மேடிசன் கீஸ் ஆகியோர் 2வது சுற்றுக்கு முன்னேறினர்.

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

நேற்று நடந்த போட்டியில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ், ரஷியாவின் அலினா கார்னிவா உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய மேடிசன் கீஸ் 7-5, 6-4 என்ற செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

இன்று நடந்த முதல் சுற்று போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் துருக்கியின் செனாப் ஜொன்மெசை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com