Wimbledon Tennis: 3வது சுற்றுக்கு முன்னேறினர் கோகோ காப், ஜெசிகா பெகுலா

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
pegula, coco gauff
Published on

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 2வது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

இதில் இன்று நடந்த போட்டியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, ஸ்பெயினின் சாரா சாரிப்ஸ் உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய பெகுலா 7-6 (8-6), 6-1 என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப் 6-3, 3-6, 7-6 (10-7) என்ற செட் கணக்கில் அர்ஜென்டினாவின் சோலானா சியர்ராவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

மூன்றாவது சுற்று போட்டியில் ஜெசிகா பெகுலா ஸ்பெயினின் ஜெசிகா பவுசசுடனும், கோகோ காப், சக நாட்டு வீராங்கனையான கிளையர் லி யூ உடன் மோதுகிறார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com