

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இத்தொடர் வரும் 23-ம் தேதி வரை நடைபெறுகிறது. நேற்று நள்ளிரவு அரையிறுதி சுற்று போட்டிகள் நடந்தன.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் கோகோ காப், செக் குடியரசின் சாரா பெஜ்லக் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய கோகோ காப் 6-4, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, போலந்தின் இகா ஸ்வியாடெக் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ஜெசிகா பெகுலா முதல் செட்டை 7-5 என வென்றார். இதற்கு பதிலடியாக அதிரடியாக ஆடிய ஸ்வியாடெக் 2வது செட்டை 6-4 என கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் சிறப்பாக செயல்பட்ட ஜெசிகா பெகுலா 6-4 என வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை அதிகாலை நடைபெறவுள்ள இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், சக நாட்டு வீராங்கனையான ஜெசிகா பெகுலா உடன் மோதுகிறார்.