சீனா ஓபன் டென்னிஸ்: கோகோ காப், ஸ்வியாடெக் 2வது சுற்றில் வெற்றி

சீனா ஓபன் டென்னிஸ் தொடர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது.
swiatek, gauff
Published on: 
Summary

சீனா ஓபன் டென்னிஸ் தொடரில் அமெரிக்காவின் கோகோ காப், போலந்தின் இகா ஸ்வியாடெக் இரண்டாவது சுற்றில் வெற்றி பெற்றனர்.

சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்றது.

இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றுக்கு அமெரிக்காவின் கோகோ காப், போலந்தின் இகா ஸ்வியாடெக் தகுதி பெற்றனர்.

இன்று நடந்த 2வது சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், கொலம்பியாவின் கமீலா ஒசோரியோ உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய கோகோ காப் 7-6 (7-4), 4-6, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-2, 6-3 என்ற செட் கணக்கில் சீனாவின் காவ் ஜின்யுவை வீழ்த்தி முன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com