

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இத்தொடர் வரும் 23-ம் தேதி வரை நடைபெறுகிறது. நேற்று நள்ளிரவு அரையிறுதி சுற்று போட்டிகள் நடந்தன.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் கோகோ காப், உக்ரைனின் மர்டா கோஸ்ட்யூக் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய கோகோ காப் 6-2, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் செக் குடியரசின் சாரா பெஜ்லக், அமெரிக்காவின் மேடிசன் கீஸ் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய மேடிசன் கீஸ் முதல் செட்டை6-3 என வென்றார். இதற்கு பதிலடியாக அதிரடியாக ஆடிய சாரா 2வது செட்டை 6-4 என கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் சிறப்பாக செயல்பட்ட சாரா 7-6 (7-5 ) என போராடி வென்று, அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறவுள்ள அரையிறுதி சுற்றில் கோகோ காப், சாரா பெஜ்லக் உடன் மோதுகின்றார்.