

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் வரும் 11-ம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடர் வரும் 23-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்நிலையில், சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து உலகின் 2-ம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் திடீரென விலகி உள்ளார்.
கடந்த மார்ச் மாதம் வலது மணிக்கட்டு பகுதியில் அல்காரசுக்கு காயம் ஏற்பட்டது. காயம் குணம் அடையாத நிலையில், சின்சினாட்டி ஓபன் தொடரிலிருந்து அல்காரஸ் விலகி உள்ளார்.
பிரெஞ்ச் ஓபன் மற்றும் விம்பிள்டன் டென்னிஸ் உள்பட புல்வெளி மைதானத்தில் நடந்த அனைத்துத் தொடர்களையும் காயம் காரணமாக தவறவிட்டார்.
கார்லோஸ் அல்காரஸ் கடைசியாக பார்சிலோனா ஓபன் தொடரில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.