சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் பிரிட்டன் வீரர் அதிர்ச்சி தோல்வி

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பிரிட்டன் வீரர் கேமரூன் நூரி 2வது சுற்றில் தோல்வி அடைந்தார்.
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் பிரிட்டன் வீரர் அதிர்ச்சி தோல்வி
Published on

சின்சினாட்டி:

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இது அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது. இந்தப் போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இதில் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பிரிட்டனின் கேமரூன் நூரி நேரடியாக 2வது சுற்று ஆட்டத்துக்கு தகுதி பெற்றார்.

நேற்று நடந்த 2வது சுற்றில் பிரிட்டனின் கேமரூன் நூரி, ஸ்பெயின் வீரர் ராபர்டோ பவுடிஸ்டா உடன் மோதினார்.

இதில் கேமரூன் நூரி 4-6, 3-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com