

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அங்குள்ள டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது.
இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்று போட்டியில் அமெரிக்காவின் பென் ஷெல்டன், சக நாட்டு வீரரான லேனர் டைன் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய பென் ஷெல்டன் 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு அரையிறுதி போட்டியில் ஸ்பெயினின் ரபேல் ஜோடார், அமெரிக்காவின் பிராண்டன் நகஷிமா உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய பிராண்டன் நகஷிமா 7-6 (7-3), 6-4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெற உள்ள இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் பென் ஷெல்டன், சக நாட்டு வீரரான பிராண்டன் நகஷிமா உடன் மோதுகிறார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நாளை நடைபெற உள்ள இறுதிச்சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக், கஜகஸ்தானின் எலினா ரிபாகினா உடன் மோதுகிறார்.