மியாமி ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றது போபண்ணா ஜோடி

அமெரிக்காவில் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகிறது.ஆண்கள் இரட்டையர் பிரிவில் போபண்ணா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
மியாமி ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றது போபண்ணா ஜோடி
Published on

மியாமி:

அமெரிக்காவில் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகிறது. தற்போது இந்தத் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி, குரோஷியாவின் இவான் டோடிக், அமெரிக்காவின் ஆஸ்டின் கிராஜிசெக் ஜோடியுடன் மோதியது.

இதில் முதல் 2 செட்டுகளை ஆளுக்கு ஒன்றாக கைப்பற்றிய நிலையில், 3-வது செட்டை போபண்ணா ஜோடி வென்றது.

இந்தப் போட்டியில் போபண்ணா ஜோடி 6-7, 6-3, 10-6 என்ற செட் கணக்கில் கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com