அமெரிக்க ஓபன்: கலப்பு இரட்டையர் பிரிவில் போபண்ணா ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.இதில் இந்தியாவின் ரோகன் போபண்ணா ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது.
அமெரிக்க ஓபன்: கலப்பு இரட்டையர் பிரிவில் போபண்ணா ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது
Published on

நியூயார்க்:

நடப்பு ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-இந்தோனேசியாவின் அல்டிலா சுட்ஜியாடி ஜோடி,

ஆஸ்திரேலியாவின் ஜான் பீர்ஸ்-செக் வீராங்கனை கத்ரினா சினிகோவா ஜோடியுடன் மோதியது.

இதில் போபண்ணா ஜோடி 0-6, 7-6 (7-5), 10-7 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com